பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (39). இவர் பொக்லைன் எந்திரம் வாங்குவதற்காக 34 வயது பெண்ணிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக மகேஷ் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மகேஷ் அவரை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மகேசை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story