மாமல்லபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதல்; டிரைவர் சாவு - 3 பேர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவர் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் இருந்து 3 பேரை சவாரி ஏற்றி கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றி கொண்டு ஓட்டல் எதிரில் உள்ள வளைவு பகுதியில் ஆட்டோவை திருப்பி உள்ளார். அப்போது கடம்பாடியில் இருந்து சென்னையை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story