11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயாரித்த 16½ கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது
11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயாரித்த 16½ கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது
சரவணம்பட்டி
கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவுப்படி
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சரவணம்பட்டி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதி காரிகள் சரவணம்பட்டியில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு செய்தனர்.
அங்கு உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா?.
சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில், 11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயாரித்த 16½ கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 11 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
Related Tags :
Next Story