செட்டிபாளையம் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்


செட்டிபாளையம் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 7 May 2022 8:10 PM IST (Updated: 7 May 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

செட்டிபாளையம் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்



போத்தனூர் 

செட்டிபாளையம் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை

கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (வயது 63). இவருடைய வீட்டின் அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். மிட்டாய் தருவதாக கூறி அந்த சிறுவனை குப்புச்சாமி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். 

அங்கு அவர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுவன் அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றார். அவனிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்த சம்பவம் பற்றி கூறினான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். 

அதன்பேரில் செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்புச்சாமியை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இதில், குப்புச்சாமி ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், 

அதன் பிறகு 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குப்புச்சாமியை போலீசார் கைது செய்தனர். 

அவரால் மேலும் வேறு யாராவது பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story