செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2022 1:24 PM IST (Updated: 8 May 2022 1:24 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் ஈச்சம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் நீரிழிவு நோய் காரணமாக கடந்த 2-ந் தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் காலில் இருந்த இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் கடுமையான வலியினாலும், மன உளைச்சலிலும் இருந்த ராமலிங்கம் ஆஸ்பத்திரியின் குளியல் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உயிரிழந்த ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story