வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காஞ்சீபுரம்,
நீர்நிலைகள் இல்லா இடங்களில் பல வருடமாக குடியிருக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கோவில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் 860 மனுக்களை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இந்த மனுக்கள் விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
இதில் மாநில குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு கே.நேரு, ரமேஷ், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story