ஜப்பான் தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது - ஆராய்ச்சி மைய இயக்குனர் பேச்சு
ஜப்பான் தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது என அதன் ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம்,
மும்பையில் உள்ள இந்திய அணுசக்தித்துறை மற்றும் தேசிய பத்திரிக்கையாளர் மையம் இணைந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி, சமூக பொறுப்பு, புதிய தொழில்நுட்பம் குறித்து 5 நாள் தேசிய பயிற்சி முகாம் நடத்தினர்.
இதில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், கேரளா, உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தேசிய பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கல்பாக்கம் இந்திரா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் பேசியதாவது:-
அணுசக்தி துறையின் புதிய கண்டுபிடிப்புகள் என்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் எவ்வளவு முக்கியமோ, அதே போன்று அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக திகழ்கிறது.
ஜப்பான் தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு நிலநடுக்கத்திலும் அசைவின்றி இயங்கும் வகையில் கல்பாக்கம் அணுமின் உலை உள்ளது. கல்பாக்கம் அணுசக்தி மையத்தின் அனைத்து பரிவுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் நடைபெறும்போது தேர்வில் கலந்து கொள்ளும் உள்ளுர் மக்கள் எளிதாக தேர்வினை எழுதும் வகையில் இனி கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தியுடன் தமிழிலும் தனியாக வழங்கப்படும். இனி அணுமின் நிலைய அனைத்து துறைகளுக்கும் நடக்கும் எழுத்து தேர்வில் பங்கேற்கும் தமிழக மக்கள் இனி தமிழிலேயே தேர்வு எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story