உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய பார் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்


உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய பார் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 8 May 2022 7:02 PM IST (Updated: 8 May 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய பார் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்


கோவை

உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய பார் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநங்கை

கோவையை அடுத்த சூலூர் அருகே பள்ளபாளையத்தை சேர்ந்தவர் தர்ஷா (வயது 33). திருநங்கை. 

இவர் இரவில் தனது தோழிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு திருச்சி ரோடு காமாட்சிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். 

அங்கு தர்ஷாவுக்கு ஏற்கனவே பழக்கமான பார் ஊழியர்கள் மேகநாதன், பூவரசன் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். 

அவர்கள், திடீரென்று தர்ஷாவிடம் பேச்சு கொடுத்து, உல்லாச மாக இருக்கலாம் என்று கூறி அழைத்ததாக தெரிகிறது.

அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும், தர்ஷாவிடம் இருந்த பணம், மற்றும் செல்போனை பறிக்க முயன்று உள்ளனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரம் அடைந்த மேகநாதன் தர்ஷாவை சரமாரியாக தாக்கினார். அப்போது பூவரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்ஷாவை கழுத்து மற்றும் தோள் பட்டையில் குத்தி னார். 

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். உடனே மேகநாதன், பூவரசன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தர்ஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசன், மேகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story