ஆசிரியர் வீட்டில் 41½ பவுன் நகை திருட்டு
கம்பத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 41½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கம்பம்:
அரசு பள்ளி ஆசிரியர்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 3-வது வார்டு எல்.எப்.மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 51). இவர், குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை இவர், கம்பத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் அருகே உள்ள மாமனார் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 41½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
மோப்பநாய் சோதனை
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு ஜெயச்சந்திரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதேபோல் மோப்ப நாய் லக்கி மூலம் ேசாதனை நடத்தப்பட்டது. அது, திருட்டு நடந்த வீட்டில் இருந்து மெயின்ரோட்டில் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஜெயச்சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story