விபத்தில் இறந்த பின்னரும் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்த ராணுவ வீரர்
விபத்தில் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானத்தால் பேரையூர் ராணுவ வீரர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளார்.
பேரையூர்,
விபத்தில் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானத்தால் பேரையூர் ராணுவ வீரர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளார்.
பேரையூர் ராணுவ வீரர்
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த சின்னமருது மகன் முரளி மனோகரன் (வயது 29). இவர் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவருக்கு கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி மதுராவில் பணி முடிந்து முரளி மனோகரன் மோட்டார் சைக்கிளில் குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு சென்றது. மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிைலத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
3 ேபருக்கு மறுவாழ்வு
இதையடுத்து அவரது உடல்பாகங்களான கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அவரது மனைவியின் ஒப்புதலோடு தானம் செய்யப்பட்டது. அவை ராணுவ ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுபவர்களுக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும். இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.
இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பேரையூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் பலியான அவரது உடலை பார்த்து அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து அவரது உடல் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story