நாற்று நட்டு, துணி துவைத்து பெண்கள் போராட்டம்
கூடலூர் அருகே மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாற்று நட்டு, துணி துவைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பை அடுத்த வண்ணான்துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளது. அங்கு இருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடந்த 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தொடர்ந்து 2-வது நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் 3-வது நாள் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாவிரத மேடைக்கு முன்பு பெண்கள் தரையில் நெல் நாற்றுகளை நட்டும், துணி துவைத்தும் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இத்திட்டத்தை மாற்றி அமைக்காவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். உண்ணாவிரத போராட்டத்தால் லோயர்கேம்ப் அருகே குருவனூத்து வண்ணான்துறையில் நடக்க இருந்த பூமிபூஜை பணிகள் நேற்று நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story