பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்


பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 May 2022 8:26 PM IST (Updated: 9 May 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்


கோவை

பாலூட்டும் தாய்மார்கள், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

அமுதம் திட்டம் தொடக்க விழா

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் தொடக்க விழா கோவையில் நடந்தது.

கோவை மக்கள் சேவை மைய நிறுவனர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை,   சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி வரவேற்றார்.

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தை களுக்கு இலவச பசும்பால் வழங்கும் அமுதம் என்ற திட்டத்தை யும், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் இதம் என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது

பாராட்டுக்கள்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண் ணத்தில் இந்த திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். 

பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து செயல்பட்டு வரும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

இதுபோன்ற சேவை செய்யக்கூடிய எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க வேண்டும் என்றால்  அடுத்து வரும் தேர்தலில் நீங்கள் பா.ஜனதா அரசு ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

பசும்பால் இலவசம்

இந்த திட்டத்தில் தினமும் பயனாளிகளுக்கு ¼ லிட்டர் பசும் பால் வழங்கப்படுகிறது. இந்த பசும்பால் பெற தகுதியானவர்கள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 

அவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை அருகில் உள்ள மளிகை கடைகளில் காட்டி அமுதம் பசும்பாலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கோவை மக்கள் சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story