பிளஸ்-2 ஆங்கில தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்
பிளஸ்-2 ஆங்கில தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்
கோவை
பிளஸ்-2 ஆங்கில தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்.
பிளஸ்-2 ஆங்கில தேர்வு
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிபாட தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நேற்று ஆங்கில தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறியதாவது
நவீனா:- ஆங்கில தேர்வு வினாக்கள் எப்படி இருக்குமோ? என்று பயந்தவாறு சென்றேன். ஆனால் வினாத்தாளில் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தது.
இதனால் அனைத்து கேள்விகளுக்கும் விைட அளிக்க முடிந்தது.
தீபகுமார்:- ஆங்கில பாடத்தேர்வு எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்தது.
அனைத்து கேள்விகளும் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த தேர்வை அச்சமின்றி எழுத முடிந்தது.
எளிமையாக இருந்தது
ஹரிகரன்:- இந்த தேர்வுக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஆனால் அனைத்தும் தெரிந்த வினாக்களாகவே இருந்தது. இதனால் தேர்வை நன்றாக எழுதினேன்.
ரித்திகா:- ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள் 9 பக்கங்கள் இருந்தன. 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தது.
ஆர்த்தி:- வினாத்தாள் பிரிவு 4-ல் 5 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்திய கலாசாரம்
இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளி விவரங்கள் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story