செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது


செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
x
தினத்தந்தி 9 May 2022 8:37 PM IST (Updated: 9 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது



கோவை

செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செல்போன் பயன்பாடு

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ட னை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். 

கோவை மத்திய சிறைக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி உள்ளார். இதை பார்த்த மற்றொரு கைதி, சிறை வார்டனிடம் கூறியதாக தெரிகிறது.

 இது தொடர்பாக அந்த கைதிக்கும், மற்ற சில கைதிகளுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கைதிகள் மோதல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் புகார் தெரிவித்த கைதி முதல் பிளாக்கில் இருந்து புத்தகம் எடுப்பதற்காக வால்மேடு 3-வது பிளாக்கிற்கு சென்றார்.

 அப்போது அங்கு 5 கைதிகள் அவரை வழிமறித்து சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதை சிறை வார்டனிடம் ஏன் கூறினாய்? என்று கேட்டு உள்ளனர்.

இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கைதிகள் 5 பேரும் சேர்ந்து அந்த கைதியை தகாத வார்த்தைகளால் பேசி கை மற்றும் கற்களால் தாக்கினர். 

மேலும் கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

5 பேர் மீது வழக்கு

உடனே மற்ற கைதிகள் ஜெயில் வார்டனுக்கு தகவல் கொடுத்த னர். அதைத்தொடர்ந்து காயமடைந்த கைதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்து ஜெயிலர் சிவராசன் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில் கைதியை தாக்கியது கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 5 பேர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கூட்டாக சேர்ந்து தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இது குறித்து போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிறைக்குள் கைதிகள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story