குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்ததால் தனியார் நிறுவன ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓட்டலுக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்ததால் தனியார் நிறுவன ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓட்டலுக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
கோவை
குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்ததால் தனியார் நிறுவன ஊழியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓட்டலுக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
குளிர்சாதன வசதிக்கு கட்டணம்
கோவை வெள்ளலூர் அருகே இடையர்பாளையத்தை சேர்ந்தவர் நிவாஸ்ராஜ் (வயது 26), தனியார் நிறுவன ஊழியர்.
இவர் தனது நண்பருடன் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி கோவையில் உள்ள ஜூனியர் குப்பண்ணா என்ற ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
குளிர்சாதன வசதியுள்ள அந்த ஓட்டலில் அவர்கள் 2 பேரும் அமர்ந்து பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டனர்.
அதன் பிறகு தாங்கள் சாப்பிட்ட உணவுக்கு பில் கொடுத்தனர். அதில் குளிர்சாதன வசதிக்கு (ஏ.சி.) கட்டணமாக ரூ.20-ம் அதற்கு தனியாக ஜி.எஸ்.டி. 5 சதவீதமும் சேர்த்து கணக்கிடப்பட்டு இருந்தது.
உரிமையாளருக்கு கடிதம்
இதனால் அதிர்ச்சி அடைந்த நிவாஸ்ராஜ், ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
எனவே அவர் அந்த கட்டணத்துடன் சேர்ந்து சாப்பிட்டதற்கான தொகையை செலுத்தினார்.
இதையடுத்து அவர், தன்னிடம் குளிர்சாதன வசதிக்கு வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று அந்த ஓட்டலின் உரிமையாளருக்கு கடிதம் எழுதினார். அதற்கும் சரியான பதில் அளிக்க வில்லை என்று தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அவர், குளிர்சாதன வசதிக்கு தனியாக கட்டணம் வசூலித்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் மற்றும் நீதிபதி தங்கவேல், உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் விசாரித்தனர்.
இழப்பீடு வழங்க உத்தரவு
அதில் குளிர்சாதன வசதிக்கு கட்டணம் வசூலித்தது சேவை குறைபாடு ஆகும். எனவே ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் நிர்வாகம், நிவாஸ்ராஜிடம் குளிர்சாதன வசதிக்கு வசூலித்த கட்டண தொகை ரூ.21, மனஉளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்.
அந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து தற்போது வரை 9 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்
Related Tags :
Next Story