சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
கோவை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
கோவை மதுக்கரை பஜார் வீதியை சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 31). போட்டோகிராபர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் பீளமேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி, மதுக்கரையில் உள்ள பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அப்போது காஜா உசேன், சிறுமியுடன் நெருங்கி பழகினார். ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது. சிறுமியை காணாததால் பெற்றோர், பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, காஜா உசேன் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
20 ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
போலீசார் காஜா உசேன் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காஜா உசேனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story