இந்தி திணிப்பை பா ஜனதா அனுமதிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்

இந்தி திணிப்பை பாஜனதா அனுமதிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்
கோவை
இந்தி திணிப்பை பா.ஜனதா அனுமதிக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளின் கூட்டம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
இலங்கையை பொறுத்தவரை அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.
இதை அவர்களின் உள்நாட்டு அரசியல் பிரச்சினையாக இந்தியா பார்க்கிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூலதனமாக இருப்பது, கடந்த 6 மாத காலமாக இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதுதான்.
இதனால் இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
107 வகையான மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன.
மேலும் 4 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் மற்றும் காய்கறிகள் போன்றவை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களில் சிங்களர்கள் அதிகமாக குடியமர்த்தப்பட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா 60 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்து உள்ளது. மேலும் விமான நிலையம், ரெயில்பாதை, நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து உள்ளது.
இந்தி திணிப்பு
இலங்கைக்கு தமிழக அரசு செய்யும் உதவிகளுக்கு பா.ஜனதா உறுதுணையாக இருப்போம். ஆனால் தற்போது இலங்கைக்கு தேவை டாலர்கள்.
அங்கு டாலர்கள் இல்லாததால் அனைத்து பொருட்களின் விலையும் 3 மடங்கு உயர்ந்து உள்ளது.
எனவே ஐ.எம்.எப். அதிகாரிகள் இலங்கை சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இந்தி திணிப்பை தமிழகத்தில் பா.ஜனதா அனுமதிக்காது. இது கட்சியின் நிலைப்பாடு.
ஜிப்மர் மருத்துவமனையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தியில் கோப்புகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டை பற்றி அதிகமாக பேசுவது பா.ஜனதாதான். நானும் மின்வெட்டை அதிகமாக பேசி வருகிறேன்.
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். எனக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறினார்கள். இதுவரை நோட்டீஸ் எதுவும் வரவில்லை.
தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது சமூக நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருதினால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
மேலும் அவர்களின் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






