நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்


நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 May 2022 11:19 PM IST (Updated: 9 May 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மீது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம், 
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மீது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் மற்றும் பாலம் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் 20-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில்  50-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட 5-வது மணல்திட்டு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கூறி மீனவர்கள் மீது கம்பால் அடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை நேற்று காலை மீன் பிடித்து கரை திரும்பிய தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது இதேபோல் கடந்த 8-ந்் தேதி அன்றும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் எங்களிடம் இருந்த 3 செல்போன்களையும் பறித்து தாக்குதல் நடத்தினர் என்றனர்.
விசாரணை
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தசம்பவம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்கள் இனப்பெருக்க கால தடையை தொடர்ந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story