திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததானம் மற்றும் ரத்தவகை கண்டறிதல் முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1 மற்றும் 2 நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்(சுயநிதிப்பிரிவு) அணி எண் 231 சார்பாக ரத்ததானம் மற்றும் ரத்தவகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலமை தாங்கினார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் மற்றும் அலுவலர்கள் ரத்ததானம் மற்றும் ரத்தவகை கண்டறிதல் முகாமை கல்லூரியில் நடத்தினர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்ததை பாராட்டி, கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார். ரத்த வங்கி டாக்டர் ஆர்.சசிகலா மற்றும் அரசு மருத்துவமனை அலுவலர்கள் பங்கேற்றனர். ரத்ததானம் செய்த பேராசிரியர் திருச்செல்வன் உள்பட 57 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டுநலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அதிகாரி த.ஜெயராமன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பேராசிரியை பார்வதிதேவி செய்திருந்தார். முகாமில் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, சிவந்தி வானொலி தொழிற்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story