கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்


கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்
x
தினத்தந்தி 10 May 2022 7:07 PM IST (Updated: 10 May 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்


எட்டிமடை

கேரளாவில் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் வாளையார் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

தக்காளி காய்ச்சல்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது கொப்பளம் போல் தோன்றக்கூடிய இந்த காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 இதனால் பாதிக்கப்பட்ட 82 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த தக்காளி காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை ெகாண்டது. 

எனவே அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தமிழக -கேரள எல்லையான வாளையார் வழியாக ஏராளமான வாகனங்கள் கோவை வருகின்றன. 

இதனால் கோவையிலும் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை தீவிரம்

கேரளாவில் இருந்து கோவை வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். 

அந்த வாகனங்களில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்க ளுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர்.

மேலும் கை மற்றும் தோலில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்கின்றனர். 

மேலும் கேரளா வில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முககவசம் மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் இருக்கிறதா? என்பது குறித்தும் பயணிகளிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

 அதன் பிறகே அந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படு கிறது.இந்த பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜ்குமார், கார்த்தி, சந்தோஷ், வருவாய்த்துறை சார்பில் ஆனந்தகுமார், க.க. சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

24 பேர் அடங்கிய குழு

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாளையார் சோதனைச் சாவடியில் வாகனங்களில் வரும் பயணிகள், குழந்தைகளுக்கு தக் காளி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதிக்கும் பணி யில் 2 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை அறிய 24 பேர் அடங்கிய குழு சோதனை செய்து வருகிறது என்றனர்.


Next Story