சூலூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். அது போல் சரக்கு முனையம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்து உள்ளனர்


சூலூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். அது போல் சரக்கு முனையம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்து உள்ளனர்
x
தினத்தந்தி 10 May 2022 7:15 PM IST (Updated: 10 May 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

சூலூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்


கோவை

சூலூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்து உள்ளனர்.

தொழில் நகரம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக பெரிய தொழில் நகரமாக கோவை விளங்கு கிறது. 

இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆனால் கோவையை பொறுத்த வரை ரெயில் போக்குவரத்து வசதி சிறப்பாக இல்லை என்றே கூறலாம். கோவை ரெயில் நிலையம் மட்டுமே மேம்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்கள் பழைய நிலையிலேயே காட்சி அளிக்கின்றன. அதில் குறிப்பாக கோவையை அடுத்த சூலூர்   ரெயில் நிலையம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகிறது.

பயணிகள் கவலை

இங்கு ஒரே நேரத்தில் 4 ரெயில்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. கோவை அவினாசி ரோடு, கோவை திருச்சி ரோடு ஆகிய 2 முக்கியமான ரோடுகளுக்கு நடுவே சூலூர் ரெயில் நிலையம் உள்ளது.

 சூலூரில் விமானப்படை தளம், ஏராளமான தொழிற்பேட்டை உள்ளன. ஆனாலும் அந்த ரெயில் நிலையம் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.

இங்கு ஒருசில பயணிகள் ரெயில் மட்டுமே நின்று செல்கின்றன. விரைவு ரெயில்கள் எதுவும் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் தொழில் துறையினர் மற்றும் பயணிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சரக்கு முனையம்

சூலூர் ரெயில் நிலையத்தில் நிறைய இடவசதிகள் உள்ளதால் சரக்குகளை ஏற்றி இறக்கும் வகையில் சரக்கு முனையம் அமைக்க வேண்டும்.

 அதற்கு ஏற்ற வகையில் சரக்கு ரெயில்கள் நின்று செல்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம் கோவையில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கும், 

பிற இடங்களில் இருந்து மூலப்பொருட்களை கோவை கொண்டு வருவதற்கும் வசதியாக இருக்கும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

எனவே சரக்கு ரெயில்களை இங்கு நிறுத்தி வைத்து கோவையின் உற்பத்தி பொருட்களை ஏற்றி, இறக்க முடியும் என்று தொழிற்துறையினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story