கோவையில் பிளஸ்1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் கூறினர்
கோவையில் பிளஸ்1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் கூறினர்
கோவை
கோவையில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கூறினர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதற்காக கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியகுளம் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி என மாவட்டம் முழுவதும் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மொழிப்பாட தேர்வு
முதல்நாளான நேற்று தமிழ் உள்பட மொழிப்பாடத்துக்கான தேர்வு நடந்தது. காலை 9 மணிக்கு தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் வந்தனர்.
அவர்கள் தேர்வு அறைக்கு செல்லும் முன்பு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தேர்வு மையத்தின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு நடக்கும் அறை, தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
அதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். 9.45 மணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு அறைக் குள் அனுமதிக்கப்பட்டனர்.
10 மணிக்கு விணாத்தாள் வழங்கப் பட்டன. 10 நிமிடம் வினாத்தாளை படிக்க நேரம் ஒதுக்கப்பட ்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தொடங்கினர்.
இந்த தேர்வு காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 16 ஆயிரத்து 583 மாணவர்களும், 18 ஆயிரத்து 878 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 461 பேர் எழுதினர். 891 மாணவர்கள், 674 மாணவிகள் என மொத்தம் 1,493 பேர் தேர்வு எழுத வரவில்லை.
1,565 பேர் வரவில்லை
353 தனித்தேர்வர்களில் 281 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 72 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஒட்டுமொத்தமாக பிளஸ்-1 தேர்வை 35 ஆயிரத்து 742 பேர் எழுதினார்கள். 1,565 பேர் வரவில்லை.
இந்த தேர்வுக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள், வழித்தட அலுவலர்கள் என 3,200 பேர் பணியாற்றினர்.
ஒவ்வொரு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிளஸ்-1 தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story