அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது


அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது
x
தினத்தந்தி 10 May 2022 7:26 PM IST (Updated: 10 May 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது


கோவை

அடிக்கடி விபத்துகள் நடப்பதால் எல் அண்டு டி பைபாஸ் ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

எல் அண்டு டி பைபாஸ் சாலை

சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் முக்கிய சாலையாக கொச்சி சாலை உள்ளது. 

இதில் கணியூர் அருகே சுங்கச்சாவடி உள்ளது. இந்த சாலை கோவை அருகே உள்ள நீலாம்பூர் வரை 6 வழிச்சாலையாக இருக்கிறது. 

அங்கிருந்து மதுக்கரை வரை இருவழிச்சாலையாக இருக்கிறது.

28 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலை எல் அண்டு டி பைபாஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது. 

இதில் சுங்கச்சாவடிகளும் உள்ளன. இந்த சாலை 10 மீட்டர் அகலம் கொண்டது. 

இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின் றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன.

மற்ற பகுதிகளில் 6 மற்றும் 4 வழிச்சாலையாக இருப்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. 

ஆனால் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை அகலம் குறைந்த சாலையில் பல இடங் களில் சந்திப்பு உள்ளது.

 ஆனாலும் அந்த ரோட்டில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. 

எனவே குறுகலாக உள்ள எல் அண்டு டி பைபாஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது

என்.எச் 547 என்று அழைக்கப்படும் இந்த சாலையில் கோவை  நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 

இதில் தண்டவாளம் குறுக்கிடும் 2 இடங்களில் மேம்பாலம், நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய பாலம், சிறு நீரோடைகள் உள்ள இடங்களில் சிறிய பாலம், செட்டிபாளையம் பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்படுகிறது.

4 வழிச்சாலையாகிறது

தற்போது திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு, சாலை அகலப்படுத்தும் அளவு உள்ளிட்ட பணிகள் தொடர்பான அறிக்கை கிடைக்கும். 

அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கியதும் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story