செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 10 May 2022 2:19 PM GMT (Updated: 10 May 2022 2:19 PM GMT)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட மனுக்கள் 109 பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக்கல்வி கழகம் இணைந்து மாநில அளவில் குறளோவியம் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் காசோலைகளும், இருளர் இன மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை 2 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை 2 நபருக்கும், விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 1 நபருக்கும், முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவி ரூ.1,02,500 2 நபருக்கும், இயற்கை மரண நிவாரண நிதியுதவி 9 நபருக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா சலவை பெட்டி 10 நபருக்கும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மா.நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், உதவி ஆணையர் (கலால்) இலட்சுமணன், துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story