பள்ளி ஆண்டு விழா
அம்மையநாயக்கனூரில், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்:
அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்தர் வரவேற்றார். கவுன்சிலர்கள் செல்வி, முகமது நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி முருகேஸ்வரி, நிலக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் செலின் மேரி சிறப்புரையாற்றினார். நிலக்கோட்டை ஒன்றிய பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story