காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில்ஈடுபட்டனர்


காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில்ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 10 May 2022 9:19 PM IST (Updated: 10 May 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை

காந்திபுரம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிவிட வில்லை

கோவையை அடுத்த வெள்ளமடையில் இருந்து காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் நோக்கி நேற்று மதியம் 3 மணி அளவில் தனியார் பஸ் (எண்45) வந்து கொண்டு இருந்தது. 

அதை டிரைவர் சந்தோஷ் என்பவர் ஓட்டினார். கண்டக்டர்களாக ரஞ்சித், வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். 

கோவை- சத்தி ரோடு கணபதி அருகே அத்திப்பாளையம் பிரிவில் அந்த தனியார் பஸ்சுக்கு முன்பு காந்திபுரம்- சேரன் மாநகர் செல்லும் (தடம் எண் 3 எச்) அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. 

அரசு பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் ஓட்டினார். அவர், பின்னால் வந்த தனியார் பஸ்சுக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

இதனால் தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், தொடர்ந்து ஹாரன் அடித்தார்.

 இதற்கிடையே தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ்சை  முந்தி செல்ல பலமுறை முயன்று உள்ளார். அப்போதும் வழிவிட வில்லை என்று தெரிகிறது. இ

தனால் தனியார் பஸ் டிரைவர்  ஆத்திரம் அடைந்தார்.

இதற்கிடையே நேற்று மாலை 3.15 மணி அளவில் அந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்துக்குள் வந்தன. 

அப்போது தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், கண்டக் டர்கள் ரஞ்சித், வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் கார்த்திகேயன் காயம் அடைந்தார்.

பஸ்களை நிறுத்தி போராட்டம்

இது குறித்த தகவல் பரவியதும் மற்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காந்திபுரம் பஸ்நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே  சாலையோரம் 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை ஆங்காங்கியே நிறுத்திவிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையடுத்து பஸ் நிலையத்துக்குள் ஒரே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் திரண்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்ததும் காட்டூர் சரக உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமை யிலான போலீசார் மற்றும் கோவை கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த  போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு கொட்டும் மழையில் அரசு பஸ் டிரை வர்கள் பஸ்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

3 பேர் கைது

இது குறித்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ், கண்டக்டர்கள் ரஞ்சித், வெங்கடேஷ் ஆகிய 3 பேர் மீது

 மிரட்டல், தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story