விலை உயர்வை கண்டித்து அச்சக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விலை உயர்வை கண்டித்து அச்சக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 10:45 PM IST (Updated: 10 May 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

காகிதம், மை, உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து அச்சக நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காகிதம், மை, உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்தும், அச்சகங்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், வங்கி கடனை எளிதாக்கி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  பிரிண்டர்ஸ் நலச்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பரிமளம் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அச்சகங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும். 

புதிய தொழில்நுட்பத்தால் அழியும் பாராம்பரிய தொழில்முறை, மூடப்படும் அச்சகங்கள் மற்றும் தொழில் நஷ்டத்தால் ஏற்படும் இறப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதில் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story