அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்- ஓய்வு பெற்ற அலுவலர்கள்


அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்- ஓய்வு பெற்ற அலுவலர்கள்
x
தினத்தந்தி 12 May 2022 12:15 AM IST (Updated: 11 May 2022 4:08 PM IST)
t-max-icont-min-icon

அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீடாமங்கலம்:-

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க 31-வது ஆண்டு விழா நீடாமங்கலம் வட்ட தலைவர் சுரேஷ்பாட்சா தலைமையில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பணியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியை கவுரவ ஆலோசகர் சிவஞானம் ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் ராஜகோபாலன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுதலைவர் கலியமூர்த்தி, திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலர் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story