பொதுவினியோக திட்ட சேவைகள் குறித்து குறைதீர் முகாமில் மனு அளிக்கலாம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்


பொதுவினியோக திட்ட சேவைகள் குறித்து குறைதீர் முகாமில் மனு அளிக்கலாம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 6:45 PM GMT (Updated: 11 May 2022 12:15 PM GMT)

பொதுவினியோக திட்ட சேவைகள் குறித்து குறைதீர் முகாமில் மனு அளிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:-

பொதுவினியோக திட்ட சேவைகள் குறித்து குறைதீர் முகாமில் மனு அளிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்காக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் கிராம நிர்வாக அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில்  குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று பொது வினியோக திட்ட சேவைகள் குறித்து மனு அளிக்கலாம். 
அதன்படி திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை, நன்னிலம் வட்டம் நெம்மேலி, குடவாசல் வட்டம் சேங்காலிபுரம், வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி, மன்னார்குடி வட்டம் மழவராயநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று மனு அளிக்கலாம்.

காவனூர்-ஆலத்தம்பாடி

இதேபோல் நீடாமங்கலம் வட்டம் அரிச்சபுரம், கூத்தாநல்லூர் வட்டம் காவனூர், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலத்தம்பாடி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களும் முகாமில் பங்கேற்று மனு அளிக்கலாம். 
முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்கள், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள், பொதுவினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறித்த புகார்கள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story