மாவட்ட செய்திகள்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை + "||" + special pooja at temple

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை நடந்தது.
குடவாசல்:-

குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது தோஷ பரிகார பூஜை நடந்தது. பூஜையை சிவாச்சாரியார் கவுரிசங்கர் நடத்தினார். இதில் ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள பக்தர்கள், வெள்ளியால் ஆன நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியங்கள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.