மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பொள்ளாச்சியில் மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அமைதி நகரில் உள்ள மதுரை வீரன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8-ந் தேதி ஊர்சாந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மதுரை வீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கு தேவையான தாலி, மாலைகள் உள்ளிட்ட 25 வகையான சீர் வரிசை பொருட்களுடன் மேள, தாளம் முழுங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பாராம்பரிய முறைப்படி பொம்மியம்மன், வெள்ளையம்மனுக்கு தாலி கட்டி, மாலைகள் மாற்றி வேதங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமுது பொங்கல் தீபாராதனை, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, சனிக்கிழமை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story