புத்துணர்ச்சி கலை விழா கொண்டாட்டம்


புத்துணர்ச்சி கலை விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:07 PM GMT (Updated: 2022-05-11T21:37:24+05:30)

வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புத்துணர்ச்சி கலை விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை

வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி கலை மற்றும் சமூக மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கான புத்துணர்ச்சி கலை விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர்  செல்வ முத்துக்குமாரசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

விழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பல வண்ணங்களில் ரங்கோலி கோலமிட்டனர்.  மாணவிகளுக்கு மெகந்தி வரைவது, கழிவுகளை கொண்டு பலவடிவ பொருட்களை உருவாக்குவது, தீயில்லாமல் சத்தான உணவை தயாரிப்பது, மண்பானையில் வர்ணம் தீட்டுவது, புகைப்படம் எடுப்பது மற்றும் நாட்டிய, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. 

வருகிற நாட்களில் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்த புத்துணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த விழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story