வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 9:58 PM IST (Updated: 11 May 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

வட்டார கல்வி அலுவலரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்பாடி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காட்பாடி வட்டார கிளை மற்றும் ஓய்வு பெற்றோர் பிரிவு சார்பில் காட்பாடி வட்டார கல்வி அலுவலர் மோகன்ரெட்டியை கண்டித்து காட்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. காட்பாடி வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கீதா, செயலாளர் குப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநிலத் தலைவர் சுதாகரன், புரவலர் சத்யானந்தன் ஆகியோர் பேசினர்.

ஆசிரியர்களின் பணிப்பதிவேடு முறையாக பதிவிடாதது, வருமானவரி, டி.டி.எஸ். பிடித்தம் செய்யாமல் பணத்தை விரயம் செய்வது, ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் பணப்பலன்களை உரிய நாட்களில் வழங்காமல் காலம் தாழ்த்துவது உள்பட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்ட தலைவர் ஜோதியப்பன், சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் மலர்செல்வி, ஜமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story