கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 9:59 PM IST (Updated: 11 May 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி, 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.  வட்ட செயலாளர் ஜெயமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சந்தானகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். 
கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த நில அளவை பயிற்சி உட்பிரிவு கோப்புகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய உடனடியாக நில அளவை பயிற்சி வழங்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது, நகரப்பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நகர கணக்குகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குறிஞ்சிப்பாடி வட்டத்தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

Next Story