தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்


தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 4:48 PM GMT (Updated: 2022-05-11T22:18:54+05:30)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் வருகின்ற 13-ந் தேதியன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்கள் கலந்துக்கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 40 வரை. வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்த முகாமில் கல்விச்சான்றுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story