மனைவி பிரிந்த ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்த ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 5:07 PM GMT (Updated: 2022-05-11T22:37:48+05:30)

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1½ வருடமாக தனியாக வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த இவருக்கு தீராத வயிற்று வலியும் இருந்தாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story