ஆட்சீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றது.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்து உள்ளதால் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-வது நாள் நேற்று தேர் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.
விழாவையொட்டி காலை 7 மணிக்கு ஆட்சீஸ்வரர் பார்வதி அம்மனுடன் பெரிய தேருக்கு எழுந்தருளினார். இளங்கிளி அம்மன் சிறிய தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வீதி உலா நடைபெற்றது. இரண்டு தேர்களும் அச்சரப்பாக்கம் நான்கு மாட வீதிகளிலும் வீதி உலா வந்து மாலை தேர் நிலையை அடைந்தது.
இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 6 மணிக்கு தேரில் இருந்து இறங்கி சிவன் பார்வதி மற்றும் இளங்கிளி அம்மன் கோவில் ஸ்தல விருட்சமான கொன்றை மரத்தின் கீழ் உள்ள கொன்றயடி ஈஸ்வரர் சன்னதிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.
Related Tags :
Next Story