மராட்டியத்தில் புதிதாக 221 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் புதிதாக 221 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 221 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் நேற்று 30 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 221 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மராட்டியத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 78 லட்சத்து 79 ஆயிரத்து 843 ஆக உயர்ந்தது. ஒரு இறப்பு பதிவானதன் மூலம் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 850 ஆக அதிகரித்து.
1,412 பேருக்கு சிகிச்சை
211 நோயாளிகள் குணமானதை அடுத்து, இதுவரை நோயில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 30 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது. தற்போது மாநிலத்தில் 1,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் மும்பையில் நேற்று 124 பேருக்கு தொற்று உறுதியானது. நகரில் மட்டுமே தற்போது 851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
---
Related Tags :
Next Story