காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனியில் புதிய ரேஷன் கடை திறப்பு


காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனியில் புதிய ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 12 May 2022 4:16 PM IST (Updated: 12 May 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி பகுதியில் உடனடியாக ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து உணவு வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கோகுலம் காலனி பகுதியில் பகுதி நேர புதிய ரேஷன் கடையை அமைத்தனர். இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story