ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி
x

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலியானார்.

வேடசந்தூர்: 

பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பழனியாண்டவர் விரைவு ரெயில் நேற்று இரவு திண்டுக்கல் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. எரியோடு ரெயில் நிலையம் அருகே அந்த ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர், திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் செல்லமந்தாடி அருகே உள்ள எருமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணன் (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு அவர் எதற்காக வந்தார்? ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story