15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே 15-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை ெசய்து கொண்டார்.
வண்டலூர்,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் சதாவர் (வயது 18), இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு 15-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? அல்லது உடன் படிக்கும் மாணவர்கள் யாராவது கீழே தள்ளி விட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story