தங்கும்விடுதியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க கோரி மனு

திருச்சி, மே.14-
தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் நிர்வாகிகள் திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவியாக அவர்களுடைய உறவினர்கள் தங்குவதற்கு கடந்த 2016-17-ம் ஆண்டில் கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் தங்கும் நபருக்கு ரூ.10 வீதம் வசூலித்து வந்தனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக விடுதியை யாரும் பயன்படுத்த அனுமதி மறுக்கிறார்கள். இது பற்றி கேட்டால் மோட்டார் பழுதடைந்து உள்ளது என கூறுகிறார்கள். ஆகவே தங்கும் விடுதி மோட்டார் பழுதை சரி செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story