இந்திய நாடார்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்

இந்திய நாடார்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது
ஆலங்குளம்:
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரசெல்வன் தலைமை தாங்கினார். தூசி. செல்வராஜ் நாடார், தங்கச்சாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், மாநில வழக்கறிஞர் அணி பொருளாளர் பால்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், அகரக்கட்டு லூர்து நாடார் பேசுகையில், ‘வருகிற 22-ந் தேதி ஆலங்குளத்திற்கு வருகை தரும் ராகம் சவுந்தரபாண்டியன் நாடாருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். அன்றைய தினத்தில் தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடத்த வேண்டும். ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவி, இளைஞரணி தலைவர் வசந்த், துணைச் செயலாளர்கள் செல்வம், ஹரிகிருஷ்ணன் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story