வளவனூர் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


வளவனூர் அருகே  சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 May 2022 4:40 PM GMT (Updated: 2022-05-14T22:10:07+05:30)

வளவனூர் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


வளவனூர், 

வளவனூர் அருகே சிறுவந்தாடு பொதுமக்கள், இறந்தவர்கள் உடலை மோட்ச குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தகனம் செய்து வந்தனர். 

இந்தநிலையில், கோவிலை சேர்ந்தவர்கள், அந்த இடம் கோவிலுக்கு  சொந்தமானது, யாரும் உடல்களை தகனம் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தை அனுகி உத்தரவு பெற்று, அங்கு வேலி அமைத்துள்ளனர்.

இதனால், 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து அமைந்துள்ள  சுடுகாட்டை இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது நீண்ட தூரம் உள்ளதால், தங்களுக்கு ஊருக்கு மிக அருகிலேயே சுடுகாடு வசதி ஏற்படுத்திதரக்கோரி சிறுவந்தாட்டில் கடலூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்த போலீசார், வருவாய்த் துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story