நிலம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது
நிலம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,
தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபர்ணா. இவர் வீட்டுமனை வாங்குவதற்காக இடம் தேடி வந்தார். அப்போது மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அசோக் ஜோதி (வயது 40) என்பவரது அறிமுகம் அபர்ணாவுக்கு கிடைத்தது.
சென்னை அருகே, வீட்டுமனை வாங்கி தருவதாக அசோக்ஜோதி கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய அபர்ணா ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.59 லட்சத்தை அசோக்ஜோதியிடம் கொடுத்து, அவர்களுக்குள் பத்திர ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதனிடையே, அபர்ணாவுக்கு வீட்டு மனையையும் வாங்கித்தராமல் கொடுத்த பணத்தில் ரூ.17 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி ரூ. 42 லட்சத்தை கொடுக்காமல் அசோக் ஜோதி ஏமாற்றி வந்தார்.
இதனால் அசோக் ஜோதியிடம் அபர்ணா, பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அசோக் ஜோதி, அபர்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, செங்கல்பட்டு குற்றப்பிரிவு போலீசில் அபர்ணா புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார், அசோக்ஜோதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story