சென்னைக்கு பஸ் விட கோரிக்கை
சிங்கம்புணரி வழியாக சென்னைக்கு பஸ் விட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று சிங்கம்புணரி, கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம்புணரியில் இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது இயல்பு நிலை திரும்பிய பிறகும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி வழியாக சென்னைக்கு பஸ் விடாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே 2 ஆண்டுக்கு முன்பு திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதோடு சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு கூடுதல் பஸ்களை விடவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story