ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் முதியவரின் கால் முறிந்தது


ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் முதியவரின் கால் முறிந்தது
x
தினத்தந்தி 16 May 2022 12:30 AM IST (Updated: 15 May 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் முதியவரின் கால் முறிந்தது.

நாகூர்:-

நாகூர் அருகே உள்ள வடக்கு பால்பண்ணை சேரியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது84). இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரில் நாகூர் - நாகை மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ராஜமாணிக்கம் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜமாணிக்கத்தின் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் நாகூர் சம்பா தோட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் முருகன் (30), தனது மோட்டார் சைக்கிளில் மேலவாஞ்சூரில் இருந்து நாகூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். நாகூர் பாலம் அருகில் சென்றபோது நாகையில் இருந்து காரைக்காலுக்கு சென்ற தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story