ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல்


ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல்
x
தினத்தந்தி 15 May 2022 9:31 PM IST (Updated: 15 May 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

உத்தமபாளையம்: 

தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் ஒன்றிய குழு தலைவராக இருந்தார். அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் 4 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர். இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜான்சி வாஞ்சிநாதன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காலியாக இருந்த தலைவர் பதவிக்கு வருகிற 25-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடக்கிறது. தற்போது ஒன்றியத்தில் 6 தி.மு.க. கவுன்சிலர்களும், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story