கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு 80 பேர் சுற்றுலா வருகை
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு 80 பேர் சுற்றுலா அழைத்து வரப்பட்டனர்.
மாமல்லபுரம்,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருந்து 80 பேர் நேற்று சென்னை சரக்கு போக்குவரத்து நண்பர்கள் குழு சார்பில் சென்னை மாநகர பஸ் மூலம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு உடன் வந்த டாக்டர்கள், ஊழியர்கள், சென்னை சரக்கு போக்குவரத்து நண்பர்கள் குழுவினர் அங்குள்ள ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினர்.
குழுவாக அவர்களை அமர வைத்து புகைப்படம் எடுத்தனர். புராதன சின்னங்களை சுற்றி பார்த்த அவர்கள் மீண்டும் மனநல காப்பகத்திற்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவருக்கும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண தொல்லியல் துறை நிர்வாகம் இலவச அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story