இலவச கண் சிகிச்சை முகாம்
காமயகவுண்டன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
உத்தமபாளையம்:
பாலமுத்தழகு குழுமம், பெஸ்ட் மணி கோல்டு, அரிமா சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முகாமுக்கு அரிமா சங்க தலைவர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆண், பெண்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
கண்புரை உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதேபோல் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாமில் தேசிய செட்டியார்கள் பேரவை தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, பால முத்தழகு குழுமத்தின் இயக்குனர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story